சட்டவிரோத நிலக்கரி சுரங்கம்: மேகாலயா அரசுக்கு அபராதம்

சட்டவிரோத நிலக்கரி சுரங்கம்: மேகாலயா அரசுக்கு அபராதம்

1 mins read

புதுடெல்லி: சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களின் செயல் பாட்டை தடுத்து நிறுத்த தவறிய மேகாலயா அரசு நூறு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் மேகாலயா அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோல் இந்தியா நிறுவனம் இந்த நிலக்கரியை ஏலமிட்டு கிடைக்கும் தொகையை மாநில அரசுடன் இணைந்து அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.