ராகுல் துணிச்சலான முடிவை எடுத்து இருப்பதாக பிரியங்கா காந்தி பாராட்டு

ராகுல் துணிச்சலான முடிவை எடுத்து இருப்பதாக பிரியங்கா காந்தி பாராட்டு

2 mins read

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகி இருப்பது துணிச்சலான முடிவு என அக்கட்சியின் பொதுச்செயல ரான பிரியங்கா காந்தி தெரி வித்துள்ளார்.

தமது சகோதரரின் இந்த முடிவை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இத்தகைய முடிவை எடுக்கும் துணிச்சல் ஒரு சிலருக்கே உண்டு," என்று தமது டுவிட்டர் பதிவில் பிரியங்கா தெரிவித் துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை வெளி யிட்டார். அதில், காங்கிரஸ் தலை வர் பதவியில் இருந்து தாம் விலகி யதை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லை எனக் குறிப்பிட் டிருந்தார். இதையடுத்து பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி யின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது அக்கட்சியின் புதிய நாடகம் என்று பாஜக விமர்சித்துள்ளது.

இதில் பாஜக கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி பதவி விலகியது பற்றி, அமேதி தொகுதியில் அவரை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறுகையில், "ஜெய் ஸ்ரீராம்" என்று மட்டும் குறிப்பிட்டார்.

பாஜகவின் செய்தித் தொடர் பாளர் நளின் கோக்லி கூறுகையில், காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்றும் பாஜக ஜனநாயக ரீதியில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ராகுல் காந்தி பதவி விலகியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசியத் தலைவராக 90 வயதான மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான இவர், தற்போது மாநிலங்களவை எம்பியாக இருக் கிறார்.

சோனியா காந்தி குடும்பத் திற்கு நெருக்கமானவராக கருதப் படும் மோதிலால் வோரா, காங் கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக இருக்க வாய்ப்புள்ள தாகக் கூறப்படுகிறது.