இந்திய மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல்

இந்திய மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல்

1 mins read
7963d9ea-d4ab-4728-9128-ddba47663ba7
-

இந்தியாவின் மத்திய வரவு செலவுத் திட்டம் இன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னர் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளியல் ஆய்வறிக்கை ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில் பொருளியல் புள்ளிவிவரங்கள் சார்ந்த சில முன்னுரைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு) மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும். இந்தத் திட்டத்துடன் ரயில்வே திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெறும் என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அரசாங்க நிதியைச் சிக்கனத்துடன் பயன்படுத்தவேண்டும், அதே நேரத்தில் வளர்ச்சியின் வேகம் குறையாமல் இருக்கவேண்டும். இதுவே திருவாட்டி நிர்மலா எதிர்நோக்கவேண்டிய சவால் என்று நிதியியல் நிபுணர்கள் கருதுகின்றனர். விவசாயிகளின் பிரச்சினைகள் மீதும் வேலை வாய்ப்புகள் மீதும் இந்த வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லறை வர்த்தகங்களுக்கு ஊக்கம் ஊட்டும் விதமாக மத்திய வர்க்கத்தினருக்கான வரிவிலக்குகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.