விலகி ஓடிய விமானங்கள்: 12 விமானிகள் நீக்கம்

விலகி ஓடிய விமானங்கள்: 12 விமானிகள் நீக்கம்

1 mins read

புதுடெல்லி: விமானங்கள் தரையிறங்கும்போது ஓடுதளப் பாதையில் இருந்து தடம் மாறிய சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 12 விமானிகள் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் ஆறு விமானங்கள் ஓடு பாதையிலிருந்து தடம் மாறின.

இரு நாட்களுக்கு முன்னர் ஜெய்ப்பூரில் இருந்து வந்த 'ஸ்பைஸ்ஜெட்' விமானம் மும்பை விமான நிலையத்தில் தடம் மாறி அருகிலுள்ள புல் தரையில் நிறுத்தப்பட்டது. அதேபோல் ஜூன் 30ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானம் சூரத் விமான நிலையத்தில் பலத்த மழை மற்றும் காற்றால் ஓடுபாதையில் இருந்து விலகியது. மேலும் கோல்கத்தா, மங்களூரு, கோழிக்கோடு, ராஞ்சி விமான நிலையங்களில் விமானங்கள் ஓடுதளப் பாதையில் இருந்து தடம் புரண்டன.