யுனெஸ்கோ பட்டியலில் ஜெய்ப்பூர்

யுனெஸ்கோ பட்டியலில் ஜெய்ப்பூர்

1 mins read

புதுடெல்லி: ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்களையும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்புமிக்க நகரமாகத் தேர்வு செய்யப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.