கணவருக்கு தெரியாமல் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.22 கோடி பரிசு விழுந்தது

கணவருக்கு தெரியாமல் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.22 கோடி பரிசு விழுந்தது

1 mins read
644fcb23-52ae-4026-a9cc-0852a734ea93
கணவர் பிரேமுடன் சொப்னா. -

அபுதாபி: கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம். இவரது மனைவி சொப்னா. இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் கடந்த 9 ஆண்டுகளாக தங்கியுள்ளனர். சொப்னா அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியளாராகப் பணிபுரிகிறார்.

அபிதாபியில் 'பிக் டிக்கெட்' என்ற லாட்டரி சீட்டு குலுக்கல் அண்மையில் நடந்தது. அதில் சொப்னா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.22 கோடியே 47 லட்சம் பரிசாக கிடைத்தது. இந்த லாட்டரி சீட்டை சொப்னா தனது கணவர் பிரேமுக்கு தெரியாமல் வாங்கியிருந்தார்.

பரிசு விழுந்த பிறகுதான் லாட்டரி வாங்கியது பற்றி கூறினார். இதனால் அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார்.

தனது மகள் நட்சத்திராவின் அதிர்ஷ்டமே இதுவரையிலான தங்களின் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என சொப்னா தெரிவித்தார். லாட்டரி பணத்தின் ஒரு பகுதி மக்கள்நல உதவிகளுக்கு பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.