லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள திபியாபுர்-பேலா சாலையில் ஒரு டெம்போ வேன் நேற்று காலை 6.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அதில் பத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். முன்னால் சென்ற மற்றொரு வேனை டெம்போ வேன் முந்த முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் பலமாக மோதியது.
டெம்போ வேனில் இருந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

