ஹைதராபாத்: செல்லப்பிராணிகளுக்கு இடையே பரவும் கடுமையான வெறி நாய் நோய்க்கிருமிகள் (ரேபிஸ்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஜூலை 6ஆம் தேதி விலங்குகளைப் பாதுகாக்கும் நோய்த்தடுப்பு நாளாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி ஹைதராபாத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் நேற்று செல்லப்பிராணிகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்பட்டது.
'ரேபிஸ்' கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இமைல் ரோக்ஸ், லூவிஸ் பேஸ்டர் ஆகியோர் 1885ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அந்தத் தடுப்பூசி முதன்முதலில் 1885 ஜூலை 6ஆம் தேதி பயன்படுத்தப்பட்டது. வெறி நாய் கடித்ததால் உயிருக்குப்போராடிய 9 வயதுச் சிறுவன் ஜோசப் மைஸ்டருக்கு முதன்முதலில் இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. படம்: ஏஎஃப்பி

