குஜராத்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

குஜராத்: பாஜகவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

1 mins read

அகமதாபாத்: குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்த பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காலியாக இருந்த 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

பாஜக சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிற்படுத்தப்பட்ட இனத்தின் தலைவர் ஜூக்லாஜி தாகூர் ஆகியோர் வேட்பாளராகப் போட்டியிட்டனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் சந்திரிக்கா சவுடாசமா, கவுரவ் பாண்டியா ஆகியோர் போட்டியிட்டனர்.

காந்தி நகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நேற்றுத் தேர்தல் நடந்தது. எம்எல்ஏக்கள் பங்கேற்று வாக்களித்தனர். இதில், காங்கிரசை சேர்ந்த அல்பேஷ் தாகூர், தாவல்சின் சாலா ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இதனால், பாஜக வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர். இது குறித்துத் தாகூர் கூறுகையில், "நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல விரும்பும் தலைமைக்கு எனது வாக்கை அளித்தேன்," என்றார்.