இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் இன்று காலை ஈரடுக்குப் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர். யமுனா விரைவுச்சாலை வழியாக புதுடெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
விபத்து குறித்து தமது இரங்கலை வெளிப்படுத்திய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தோருக்குச் சகல மருத்துவ வசதிகளையும் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என்று அந்நாட்டின் சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

