தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதவி விலகலால் ஆட்டம்காணும் கர்நாடகா சட்டமன்றம்

1 mins read
2ac2a7d8-d349-48f2-9b7d-74a4ee778796
கர்நாடக சட்டமன்றம். -

கர்நாடகாவில் பதினான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென பதவி விலகியுள்ளதால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. பதவி விலகியவர்களில் 13 பேர் கங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை உறுப்பினர்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பதவி விலக முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர்.

"இப்போது 21 கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனர், " என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா தெரிவித்திருக்கிறார்.

பதவி விலகலுக்குப் பின் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா கூட்டணியைச் சேர்ந்த 118 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை 104ஆகக் குறைந்துவிடும். இதைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கத்திற்கான வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையை இழந்திருக்கும் கர்நாடக அமைச்சர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் ஷோபா கரன்ட்லஜே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்