மழையால் நிலைகுத்திப் போன மும்பை போக்குவரத்து

மழையால் நிலைகுத்திப் போன மும்பை போக்குவரத்து

1 mins read
33f40365-63cf-4f82-9477-65e0d2a1a6b2
படம்: இபிஏ -

நாடு முழுவதும் பருவ மழை மெல்ல தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மும்பையில் மழை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மும்பையை புரட்டிப் போட்டுள்ளது. மழையின் தாக்கத்தால் மாநகரம் முழுவதும் தினந்தோறும் போக்குவரத்து நிலைகுத்திப் போகிறது. இதனால் வாகனமோட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று மும்பையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட காட்சி இது. படம்: இபிஏ