சரவணபவன் உரிமையாளர் சரணடைந்தார்

சரவணபவன் உரிமையாளர் சரணடைந்தார்

1 mins read
65053e35-2df1-4222-a034-c8604399f97f
-

கொலை வழக்கு ஒன்றின் தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று மாலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நேற்று அவர் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தனது வயதையும் உடல்நிலையையும் காரணங்களாகக் காட்டி தன்னால் உடனே சரணடைய முடியாது என்றும் தனக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார். இதன் தொடர்பில் அவர் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிபதிகள் நிராகரித்தனர். அவர் உடனே சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உறுதியாகக் கூறினர். அதனைத் தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மாலை அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை முன்னதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்