புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவருக்கும் எதிரான அவதூறு வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் இருப்பதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருவருக்கும் எதிராக டெல்லி பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா வழக்குத் தொடுத்துள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவாலுக்கும் சிசோடியாவுக்கும் ஜூலை 16ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
"என்னைப் பற்றிய அவதூறான கருத்துகளை முதல்வரும் துணை முதல்வரும் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர். கெஜ்ரிவால் சிசோடியா இருவருக்கும் தலா 14.9 மில்லியன்,
1.8 மில்லியன் ஈடுபாட்டாளர்கள் டுவிட்டரில் உள்ளனர். எனவே, இதை ஏராளமானோர் படித்திருப்பர்," என்று விஜேந்தர் குப்தா தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

