புதுடெல்லி: இந்திய ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட உள்ள குண்டு துளைக்காத உடைகளின் தரத்தில் எந்தவித சமரசத்துக்கும் இட மில்லை என மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆயுதப் படைகளுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராணுவத் துறை தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுப்பியுள்ள பல்வேறு துணைக் கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ் நாத் சிங் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். குறிப்பாக குண்டு துளைக்காத உடைகள் குறித்து அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நில வரப்படி ஆயுதப் படைகளுக்கான குண்டு துளைக்காத உடைகள் 3.55 லட்சம் அளவுக்கு பற்றாக் குறையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பற்றாக்குறையைத் தீர்க்கும் விதமாக உடை கொள்முதல் நடை பெறவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டுதான் 1.86 லட்சம் உடைகளுக்காகக் கொள்முதல் பரிந்துரை வெளியிடப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அடுத்தாண்டு ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் இந்த உடை களைத் தயாரித்து வழங்கும். இதற்கு ரூ.638.97 கோடி செலவாகும்.
"இந்த உடைகளுக்கான தரப் பரிசோதனை முடிந்து ஏற்கெனவே 10 ஆயிரம் உடைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் மாதம் மேலும் 37 ஆயிரம் உடைகள் கிடைக்கும்," என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
குண்டு துளைக்காத உடை என்பது ஒரு பாதுகாப்பு உபகரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆயுதப் படைகளுக்கு மிகத் தர மான உடைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
"ஆயுதப் படைகளுக்கு உட னடித் தேவைக்காக 50 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகள் தயாரிக்கும் பணி பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் கடந்த வழங்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கப்பட்டது," என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் கூறியுள்ளார்.

