போபால்: தொழிலதிபரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற கல்லூரி மாணவரைப் போலிசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் விபேந்தர் சிங். தொழிலதிபரான இவருக்குக் கடந்த 4ஆம் தேதி வாட்ஸ்ஆப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது.
"அடுத்த 5 தினங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையெனில் உங்களது நற் பெயர் சிதைக்கப்படும்," என்று ஒருவர் அதில் மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து அவர் போலிசை அணுக, விசாரணை முடுக்கி விடப்பட்டது. சைபர் கிரைம் பிரிவு போலிசார் விசாரணை நடத்தினர். இதில் விபேந்தருக்கு மிரட்டல் விடுத்தது கான்பூரைச் சேர்ந்த நிஷுராஜ் யாதவ் என்பது தெரியவந்தது. 21 வயதான இந்த இளையர் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டே ஒரு தனியார் நிறு வனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். விபேந்தர் சிங்குக்கு இவர் நன்கு அறிமுகமானவர். எனவே, அவர் ஒரு செல்வந்தர் என அறிந்து வைத்திருந்தார்.
மிரட்டி பெருந்தொகை கரக்கலாம் என்று திட்டமிட்டார் நிஷு ராஜ். ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில் விபேந்தர் எங்களை அணுகியதால் திட்டம் கைகூடவில்லை.

