மோசமான வானிலை காரணமாக 2,000 பேர் பலி

மோசமான வானிலை காரணமாக 2,000 பேர் பலி

1 mins read
4ef53ad6-2a09-4233-b25b-3b39aa55b867
-

புதுடெல்லி: மோசமான வானிலை காரணமாக கடந்தாண்டில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்­ளது. பல்வேறு சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

"புயல், நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு வானிலை சார்ந்த நிகழ்வுகளின் போது கடந்தாண்டில் மட்டும் 2,405 பேர் உயிரிழந்­திருப்பதாக உள்துறை அமைச்சு மூலம் தெரியவந்துள்ளது.

"இந்நிலையில் இத்தகைய நிகழ்வுகள் உலக வெப்பமயத்தால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்று அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.