மும்பையில் ரகசிய இடத்தில் எம்எல்ஏக்கள்

மும்பையில் ரகசிய இடத்தில் எம்எல்ஏக்கள்

2 mins read

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. இதற்கிடையே அவர்கள் கோவாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து சில சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதர வோடு ஆட்சி அமைத்தன. எனி னும் ஆட்சி அமைத்த முதல் நாளில் இருந்தே பிரச்சினைகள் நீடித்து வந்தன.

கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக தலைமை பல வகையிலும் முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதை பாஜக தரப்பு திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில் காங்கிரஸ், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி களைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் திடீரென பதவி விலகினர்.

இதனால் இரு கட்சிகளின் தலைமையும் கடும் அதிர்ச்சி அடைந்தன. எந்த நேரத்திலும் ஆட்சி கவிழக்கூடும் என அரசி யல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையே ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான கடைசிக் கட்ட முயற்சிகளை முதல்வர் குமா ரசாமி மேற்கொண்டார்.

அமெரிக்கா சென்றிருந்த அவர் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி காரணமாக உடனடியாக நாடு திரும்பினார். இந்நிலையில் மற்றொரு திருப் பமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் பதவி விலக நேர்ந்தது.

புதிய அமைச்சரவை அமைக்கப் படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

அதிருப்தியாளர் களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்களை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ் நிலையில் மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பூனே வுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாகவும் அங்கிருந்து பின்னர் கோவாவுக்குச் சென்றதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், மும்பையில் ரகசிய இடத்தில்தான் இன்னமும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.