செல்ஃபி மூலம் ஆசிரியர்களின் நன்னடைத்தை உறுதி

‘செல்ஃபி’ எனப்படும் தம்படங்கள் தனிப்பட்ட கேளிக்கைக்காக எடுக்கப்படுவது வழக்கம்.ஆனால் உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்கள் தாங்கள் நேரத்துடன் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறார்கள் என்பதை நிரூபிக்க வகுப்பறையில் தங்களையே ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ளவேண்டும்.

மேலும்,.வகுப்பு நேரத்தில் சமூக ஊடகங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தினால் அவர்களது சம்பளம் வெட்டப்படும் என்ற விதிமுறையை மாநில அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 700 ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தை இழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்கள் பலர் சரியாக வகுப்புகளுக்குச் செல்லாததாலும் அவர்கள் பாடம் நடத்தாமலேயே சம்பளத்தைப் பெறுவதாலும் அங்குள்ள ஆரம்பக் கல்வி முடங்கியுள்ளது. நிலைமையைச் சரிசெய்ய அந்நாட்டின் கல்வித்துறை அதிகாரிகள் புதிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

15 Oct 2019

சேமித்த 90 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து எடுக்க முடியாத அதிர்ச்சியில் ஆடவர் மரணம்