ஒன்பது மாநிலங்களில் ஒரே சமயத்தில் சிபிஐ அதிரடி சோதனை

ஒன்பது மாநிலங்களில் ஒரே சமயத்தில் சிபிஐ அதிரடி சோதனை

2 mins read
7a61781b-ef53-4731-8e65-0d75cb871fc8
சோதனை நடவடிக்கையில் அதிகாரிகள். கோப்புப்படம்: ஊடகம் -

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே சமயத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

மொத்தம், 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 110 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஆயுதக் கடத்தல், ஊழல், குற்றவியல் வழக்குகள் தொடர் பாக இந்தச் சோதனை நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வும், வழக்குகள் தொடர்பாகப் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதா கவும் சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் காலை சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று அதிரடி சோத னையில் ஈடுபட்டனர். டெல்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ராய்ப் பூர், ஹைதராபாத், மதுரை, கோல் கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் அதிகாரி கள் சோதனை நடத்தினர்.

மேலும் உத்தரப்பிரதேசம், உத் தரகாண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிக ளிலும் அதிகாரிகளின் அதிரடி யால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னறிவிப்பு இன்றி நடத்தப் பட்ட சோதனை குறித்து இதுவரை சிபிஐ தரப்பில் இருந்து எந்த வொரு அறிவிப்பும் வெளி யாகவில்லை. மிக விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்தபடி உள் ளது. வங்கி மோசடி தொடர்பாக 30 வழக்குகள் பதிவாகி உள்ளன.

1,139 கோடி ரூபாய் அளவி லான வாராக்கடன் தொடர்பில் இவ்வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக 13 வர்த்தக நிறுவனங்கள், வங்கி அதிகாரிகளின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், ஊழல் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், சிபிஐ இயக்குநர் ரி‌ஷி குமார் சுக்லா தலைமையிலான உயரதிகாரிகள் குழு, இந்த நட வடிக்கையைக் கண்காணித்த தாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங் களில் மட்டும் சோதனை நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.