லக்னோ: கல்விக்கூடங்களில் கைபேசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் அல்லது அடியோடு நிறுத்தவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கல்வித்துறை அதிகாரிகள் கைபேசி பயன்பாட்டை கட்டாயமாக்கி உள்ளனர்.
அங்குள்ள பாராபன்கி மாவட் டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரி யர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதை தடுக்கவும், தாமதமாக பள்ளிக்கு வந்தாலும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதைத் தடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, தினமும் காலையில் பள்ளி தொடங்கியதும் தங்கள் வகுப்பறை முன்பு நின்று ஆசிரியர் கள் செல்ஃபி படம் எடுக்க வேண் டும். பின்னர் அதை மாவட்ட கல் வித்துறை அலுவலகத்தின் இணை யத்தளத்துக்கு அனுப்பவேண்டும்.
காலை 8 மணிக்குள் படம் வந்து சேராவிட்டால் அன்றைய தினம் ஆசிரியருக்கு ஊதியம் கிடைக்காது என உத்தரவிடப்பட் டுள்ளது. மேலும் வகுப்பறைகளில் கைபேசியை பயன்படுத்தும் ஆசிரி யர்களுக்கும் ஊதியம் வெட்டப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறையின் கீழ் கடந்த இரண்டு மாதங்கள் மட்டும் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்தை இழந்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர்கள் பலர் பள்ளி துவங்க அரை மணி நேரத்துக்கு முன்பே பள்ளிகளுக்கு வந்துவிடுகிறார் கள். இந்தப் புதிய நடைமுறை முதல்வர், கல்வி அமைச்சரின் உத்தரவு, வழிகாட்டுதலின் பேரி லேயே செயல்படுத்தப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
ஆனால் போக்குவரத்து நெரி சல், பொது போக்குவரத்து வசதி இல்லாதது, மோசமான இணைய இணைப்பு காரணமாக செல்ஃபி படத்தை உரிய நேரத்துக்கு அனுப்ப முடியவில்லை என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

