அமைச்சர் வீட்டிற்குள் நண்டுகள் கொட்டி ஆர்ப்பாட்டம்

அமைச்சர் வீட்டிற்குள் நண்டுகள் கொட்டி ஆர்ப்பாட்டம்

1 mins read

மும்பை: அமைச்சருக்கு எதிராக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாநிலத்தில் தனாஜி சாவந்த் நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை நிரம்பி வழிந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளி ரவு அணையின் ஒரு பகுதி உடைந்து 7 கிராமங்களில் தண் ணீர் புகுந்தது.

வெள்ளம் பெருக்கெடுத்ததில் 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட் டன. 18 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகினர். அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம் என அமைச்சர் தனாஜி சாவந்த் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அமைச்சர் வீட்டில் புகுந்த தேசிய வாத காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு பெட்டி நிறைய நண்டுகளைக் கொண்டு வந்து போட்டனர். பின்னர் வீட்டின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.