ஊடுருவல் குறைந்ததாக மத்திய அரசு தகவல்

ஊடுருவல் குறைந்ததாக மத்திய அரசு தகவல்

1 mins read

புதுடெல்லி: பாதுகாப்புப் படை மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளார்.

ஊடுருவலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலகோட் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு தீவிர வாதிகளின் ஊடுருவல் 43 விழுக்காடு அளவிற்குக் குறைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித் துள்ளார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி 12 மிராஜ் ரக விமானங்கள் பாலகோட்டிற்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப் பட்டார்கள் என்றும் மத்திய அரசு மேலும் கூறியுள்ளது.

எல்லைப் பகுதிகளில் நிகழும் ஊடுருவல் சம்பவங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அளித் துள்ள பதிலில் மேலும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நித்யானந்த ராய்.