விமான பரிசோதனையில் ஈடுபட்ட ஊழியர் பரிதாப பலி

விமான பரிசோதனையில் ஈடுபட்ட ஊழியர் பரிதாப பலி

2 mins read

கோல்கத்தா: சிறிய ரக விமானத்தில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த விபத்தில் தனியார் விமான நிறுவன ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானத்தின் அடிப்பகுதியில் அவர் சோதனை மேற்கொண்ட போது ஹைட்ராலிக் விசை இயக்க அமைப்பு திடீரென மூடிக்கொண் டதே அவர் உயிரிழக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு கோல் கத்தாவில் அந்த தனியார் நிறுவன விமானம் நிறுத்திவைக்கப்பட் டிருந்தது. அச்சமயம் ஏடிஆர் வகையைச் சேர்ந்த அந்த விமா னத்தை தொழில்நுட்ப வல்லுநர் பரிசோதித்தார். இத்தகைய வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு விமானம் மீண்டும் பறக்க அனுமதிக்கப்படும்.

இந்நிலையில் விமானத்தின் அடிப்பகுதியில் அந்த ஊழியர் பணியில் ஈடுபட்டிருந்த போது ஹைட்ராலிக் விசை இயக்க அமைப்பு திடீரென மூடிக்கொண் டதில் அவரது கழுத்து விமானத் தின் தரையிறங்கும் கியர் கதவில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படு கிறது. இதனால் சில விநாடிகளில் அவரது கழுத்து துண்டாக்கப் பட்டது என்றும், சம்பவ இடத்தி லேயே அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்நிறுவனம் சார்பாக இதுவரை விளக்கம் ஏதும் வெளியிடப் படவில்லை.

ஹைட்ராலிக் விசை இயக்க அமைப்பு திடீரென மூடிக்கொண்ட தற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. முன்னெச்ச ரிக்கை செய்யாமல் இந்த இயக்க அமைப்பை மூடக்கூடாது என விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். சக ஊழியரின் உயிரிழப்பால் அத்தனியார் நிறு வன ஊழியர்கள் சோகத்தில் உள்ளனர்.