எல்லா புள்ளிவிவரங்களும் துல்லியமானவை: நிதியமைச்சர் நிர்மலா

எல்லா புள்ளிவிவரங்களும் துல்லியமானவை: நிதியமைச்சர் நிர்மலா

1 mins read
1be6fd42-6e0d-4397-9ebb-4c6bf0f2a768
-

இந்தியப் பொருளியல் கருத்தாய்விலும் வரவு செலவுத் திட்ட அறிக்கையிலும் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களின் துல்லியம் குறித்து பேசப்பட்டு வருகையில், அவை சரியாக இருப்பதாக அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த ஆவணங்களிலுள்ள பொருளியல் முன்னுரைப்புகளும் யதார்த்தமாக இருப்பதாக அவர் கூறினார்.

"வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு புள்ளிவிவரமும் உண்மையானது," என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொருளியல் ஆய்வறிக்கையைத் தயாரித்தது தலைமை பொருளியல் ஆலோசகர் என்பதை வலியுறுத்திய திருவாட்டி நிர்மலா, இந்திய அரசாங்கத்திற்கும் ஆய்வறிக்கைக்கும் இடையே "மரியாதைக்குரிய தூரம்" இருப்பதாகத் தெரிவித்தார்.