பாட்னா: திருமணப் பந்தலுக்குள் லாரி புகுந்த விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத னால் திருமண வீட்டார் சோகத்தில் மூழ்கினர்.
இச்சம்பவம் பீகாரில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்துள்ளது. லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள ஹல்சி பஜார் என்ற இடத்தில் புதன்கிழமை இரவு மேற்குறிப்பிட்ட திருமண நிகழ்வு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
திருமண வீட்டார் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டும் நடனமாடியபடியும் கொண்டாட் டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதையடுத்து சாலையை விட்டு விலகிய அந்த லாரி, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த திருமணப் பந்தலுக்குள் புகுந்தது.
வேகமாக வந்த லாரி மோதியும் அதன் அடியில் சிக்கியும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.
காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. அவரைப் போலிசார் தேடி வருகின்றனர்.
ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

