லக்னோ: வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை மணந்ததால் பாஜக எம்எல்ஏ ராஜேஸ் மிஸ்ராவால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது மகள் சாஷி தெரிவித்துள்ளார்.
23 வயதான அவர், இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது தந்தை மற்றும் இரு சகோதரர்கள் சில குண்டர்களை ஏவிவிட்டிருப்ப தாக புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி தொகுதியின் எம்எல்ஏவாக உள் ளவர் ராஜேஸ் மிஸ்ரா. இவரது மகள் சாஷி கடந்த வியாழக்கிழமை வேறு சாதியைச் சேர்ந்த அபிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு ராஜேஸ் மிஸ்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மகள் காணொளிப்பதிவை வெளியிட் டுள்ளார்.
"நான் சோர்வாக இருக்கிறேன். இதற்கு மேல் ஓடி ஒளிய முடிய வில்லை. எங்கள் உயிருக்கு ஆபத் துள்ளது. அபியையும் அவரது உற வினர்களையும் தொல்லை செய் வதை நிறுத்தி விடுங்கள். நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திராமாகவும் இருக்க விரும்புகிறேன்," என்று காணொளிப் பதிவில் சாஷி குறிப்பிட்டுள்ளார்.

