இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர கோரிக்கை

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை தர கோரிக்கை

1 mins read

புதுடெல்லி: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியு ரிமை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாநிலங்கள வையில் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் அகமது ஹாசன் இக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

"பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந் துக்கள் மற்றும் துன்புறுத்தப்படும் மற்ற சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் மசோதாவை மத்திய அரசு முன் மொழிந்துள்ளது. அதை இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்," என்றார் அகமது ஹாசன்.