புதுடெல்லி: உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ள இந் தியா, அடுத்த 8 ஆண்டுகளுக்குள் முதலிடம் பிடிக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகை தற்போது
770 கோடியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை மேலும் 200 கோடி அதிகரித்துவிடும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் உலக அளவில் இந்தியாவிலும் நைஜீரியாவிலும்தான் மிக அதிகமாக உள்ளது என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 கோடியாக உயர்ந்துவிடும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

