வீட்டை இடித்து சிறுமியைக் கொன்ற யானை

வீட்டை இடித்து சிறுமியைக் கொன்ற யானை

1 mins read
3b54f28d-7709-458e-8485-4a2b918c9569
-

இந்தியாவின் கிழக்கிலுள்ள ஒடிசா மாநிலத்தில் யானை ஒன்று, படுக்கையில் படுத்திருந்த ஏழு வயது சிறுமியைத் தனது துதிக்கையால் இழுத்துக்கொண்டு அவளை மிதித்துக் கொன்றது. சிறுமி தங்கியிருந்த வீட்டின் சுவரை இடித்துத் தள்ளிய அந்த யானை, அவளை வெளியே இழுத்து காலால் நசுக்கியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவத்தில் சிறுமியின் சகோதரியும் சகோதரனும் காயமடைந்தனர். யானை இடித்த சுவர் அவர்கள் மீது விழுந்ததால் அவ்விருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 2018ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே ஒடிசாவில் கிட்டத்தட்ட 92 பேர் யானைகளால் மிதிபட்டு உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.