ஏரியில் குளித்தபோது மூழ்கி மாண்ட ஆடவர்

ஹைதராபாத் நகருக்கு அருகே ஏரியில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த ஆடவர், ‘டிக் டோக்’ செயலியின் மூலம் தன்னைத் தானே காணொளி எடுத்துக்கொண்டிருந்தபோது அவரது உறவினர் திடீரென நீருக்குள் மூழ்கி மாண்டார்.

அந்த காணொளியில் 24 வயது நரசிம்மலு படமெடுத்துக்கொண்டிருக்கையில் அவரது உறவினர் பிரசாந்த் பின்னால் குளித்துக்கொண்டிருந்தார். டிக் டோக்கில் மெய்மறந்து போன பிரசாந்த், நரசிம்மலு நீரில் மூழ்கிக்கொண்டிருந்ததைச் சற்று நேரத்திற்குப் பிறகுதான் கவனித்தார்.   பிரசாந்த் ஏரியிலிருந்து வெளியேறி உதவிக்காக ஓலமிட்டார். ஊர்மக்கள் திரண்டு வந்து நரசிம்மலுவை மீட்டெடுத்தனர். ஆனால் அதற்குள் அவர் மாண்டுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியைத் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல தமிழகத்தையே விழுங்கிவிடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

25 Aug 2019

புதுவை முதல்வர்: விழித்திராவிடில் தமிழ்மொழியை விழுங்கிவிடுவர்