கர்நாடகா: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் குறிக்குமாறு சபாநாயகருக்கு வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக அரசியல் களம் வரலாறு காணாத அளவுக்கு நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் அந்த மாநிலத்தின் முதல்வர் குமாரசாமி எதற்கும் தயார் என்று நேற்று சட்டமன்றத் தில் சவால் விடுத்தார். 

நம்பிக்கை வாக்கெடுப்பை நாடப்போவதாகவும் அதற்கான தேதியைக் குறிக்கும்படியும் அவர் சபாநாயகர் கே.ஆர் ரமேஷ் குமாரிடம் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. 

ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், தாங்கள் பதவி விலகப்போவதாகக் கூறி கடிதங் களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்தக் கடிதங்கள் மீது அடுத்த உத்தரவு வரும்வரை எந்த வொரு முடிவையும் இப்போதைக்கு எடுக்கக்கூடாது என்றும் இப் போதைய நிலையே தொடரவேண் டும் என்றும் உச்ச நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பளித்துள்ள சூழலில், முதல்வர் நேற்று சட்ட மன்றத்தில் எதையும் சந்திக்கத் தயார் என்று சவால் விடுத்தார். 

எம்எல்ஏக்கள் பதவி விலகல் விவகாரத்தை ஜூலை 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்போவதாக உச்ச நீதிமன் றம் அறிவித்துள்ளது. 

கர்நாடகாவில் முதல்வர் குமார சாமி தலைமையில் காங்கிரஸ்= மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட் டணி ஆட்சி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் 16 எம்எல்ஏக் கள் பதவியில் இருந்து விலகி விட்டதால் அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எம்எல்ஏக்களின் பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்துவிட்டால் அரசாங்கம் அதுவாகவே கவிழ்ந்துவிடும். 

இந்த நிலையில், நேற்று 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் மழைக் கால கூட்டத்தொடர் தொடங் கியது. அதில் பேசிய முதல்வர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

“எந்த நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். பதவியில் ஒட்டிக்கொண்டே இருக்கவேண் டும் என்ற விருப்பமில்லை,” என்று முதல்வர் காரசாரமாகக் குறிப் பிட்டார்.

முதல்வர் குமாரசாமி முன்ன தாக வியாழக்கிழமை இரவு டுவிட்டரில் சில கருத்துகளைத் தெரிவித்தார். 

காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியைச் சீர்குலைக்க எவ்வளவு சதித்திட்டங்கள் நடந்தாலும் அந்தக் கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.