நீதிமன்றம்: கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை

நீதிமன்றம்: கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை

1 mins read

புதுடெல்லி: புதுச்சேரி அரசு நிர் வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கிரண்பேடி மனுவும் தள்ளுபடியானது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், அரசின் ஆவணங் களைக் கோருவதற்கு கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சு அதிகாரம் வழங்கியது.

இதை விசாரித்த உயர் நீதி மன்ற மதுரைக்கிளை, அந்தக் கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கிரண் பேடி உச்ச நீதி மன்றத்தை நாடினார். ஆனால் வெற்றி கிட்டவில்லை.

முடிவுகள் எடுக்க புதுச்சேரி அமைச்சரவைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதிகள் நீக்கினர்.