உலகக் கிண்ண உற்சாகம்; மாயமான விரல்

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நிலோத் பால் சக்கரவர்த்தி என்ற ஆடவர் சாலை விபத்தில் சிக்கியதில் அவரின் இடது கை மோதிர விரலின் முன்பகுதி துண்டாகிவிட்டது. 

அந்த விரல் பகுதியுடன் அறுவை சிகிச்சைக்காக சக்கரவர்த்தி கோல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

வியாழக்கிழமை அவருக்கு அறுவைசிகிச்சை நடப்பதாக இருந்தது. ஆனால் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு இருந்த விரல் பகுதி மாயமாகி விட்டது. 

மருத்துவமனை ஊழியர்கள் இந்தியா-நியூசிலாந்து உலகக் கிண்ண  கிரிக்கெட் விளையாட் டில் கவனம் செலுத்தி அந்த உற்சாகத்தில் விரலை கோட்டை விட்டுவிட்டனர் என்று சக்கர வர்த்தியின் மனைவி போலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியைத் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல தமிழகத்தையே விழுங்கிவிடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

25 Aug 2019

புதுவை முதல்வர்: விழித்திராவிடில் தமிழ்மொழியை விழுங்கிவிடுவர்