3 வயது மகனுக்கு துப்பாக்கி போதனை

புதுடெல்லி: கைத்துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவது எப்படி என்பதை இந்திய ஆடவர் ஒருவர் தனது மூன்று வயது மகனுக்குக் கற்றுக்கொடுக்கும் காணொளி ஒன்று இணையத் தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இது பற்றி போலிஸ் புலன் விசாரணை நடத்திவருகிறது. அந்த ஆடவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழைப் பிள்ளை களுக்காக பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் என்றும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அவருக்கு உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாக வும் போலிஸ் தெரிவித்துள்ளது. 

அந்தச் சிறுவன் ஆர்வமாகக் கேட்டதால் அவனுக்குத் தான் அதைச் சொல்லிக் கொடுத்ததாக ஆடவர் போலிசிடம் தெரிவித்து உள்ளார்.