0001 எண்ணுக்கு ரூ.5.51 லட்சம்

டேராடூன்: உத்தரகாண்ட் பாஜக எம்எல்ஏ குன்வார் பிரணாவ், தனது காருக்கு 0001 என்ற பதிவு எண்ணைப் பெற ரூ.5.51 லட்சம் கொடுத்ததாக வட்டார போக்குவரத்து கூடுதல் அதிகாரி அர்விந்த் பாண்டே தெரிவித்தார். இந்த எம்எல்ஏ ஒரு காணொளி விவகாரம் தொடர்பில் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

30 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வந்து 200 ரூபாய் கடனை அடைத்த கென்யா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்

அவுரங்காபாத்: ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்த ரிச்சர்ட் டோங்கி என்ற நாடாளு மன்ற உறுப்பினர், முப்பது வருடங் களுக்கு முன்பு 1985 முதல் -1989 வரை  மகாராஷ்டிரா மாநிலம்  அவுரங்காபாத்தில் படித்து பட்டம் பெற்றார்.

அப்போது அவர் கல்லூரியில் படிக்க பணம் இல்லாமல் சிரமப்பட் டதை அறிந்த மளிகைக் கடைக்காரரான கா‌ஷிநாத் காவ்லி என்ப வரும் அவரின் குடும்பத்தாரும் ரிச்சர்ட் டோங்கிக்கு 200 ரூபாய் கொடுத்து உதவினர். 

படிப்பு முடிந்து தாய் நாடு திரும்பிய ரிச்சர்ட் டோங்கி கடனை அடைக்க பணம் இல்லாததால் என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து இந்தக் கடனை திருப்பிப் தரவேண்டும்  என்ற  எண்ணத்துடன் கென்யா சென்றுவிட்டார். 

கென்யாவில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று  நாடாளுமன்ற உறுப் பினரானார். என்றாலும் ரிச்சர்ட் டோங்கி அந்தக் கடனை மறக்கவே இல்லை.

இந்த  நிலையில், 30 ஆண்டு களுக்கு முன்பு நடந்ததை மறக்காமல் சில நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் இந்தியா வந்த ரிச்சர்ட் டோங்கி, காவ்லியை அவரின் வீட்டில் சந்தித்து கடனை அடைத்து காவ்லியின் குடும்பத் தாரை திக்குமுக்காடச் செய்து விட்டார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. படம்: இந்திய ஊடகம்

13 Dec 2019

சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜக எம்.பி. நாடாளுமன்றத்தில் பேச்சு

பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கும் இடையே உள்ள சிறு தீவில் நித்தியானந்தா பதுங்கி இருக்கக்கூடும் என குஜராத் காவல்துறை கருதுவதாகக் கூறப்படுகிறது. கோப்புப்படங்கள்: ஊடகம்

13 Dec 2019

அமெரிக்கா சென்ற நித்தியானந்தா சீடர்கள்: வழக்கறிஞர் தகவல்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  படம்: ஊடகம்

13 Dec 2019

ஆந்திரா: பாலியல் வன்கொடுமை: 21 நாட்களில் தூக்கு