சந்திராயன்-2 விண்கலம் இப்போதைக்கு விண்வெளி செல்லாது

சந்திராயன்-2 விண்கலம் இப்போதைக்கு விண்வெளி செல்லாது

1 mins read
9c6a52de-93e1-4789-b210-1a3970062aac
-

நிலவுக்குச் செல்லும் 'சந்திராயன்-2' இந்திய விண்கலனைப் பாய்ச்சும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ஏவுகணை பாய்ச்சப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியாவின் விண்வெளி ஆய்வமைப்பான 'இஸ்ரோ' தெரிவித்தது.

ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்த விண்கலன் வேறொரு சமயத்தில் ஏவப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியது.