ஹிமாச்சலப் பிரதேசத்தில் இடிந்து விழுந்த கட்டடம்; 13 பேர் பலி

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இடிந்து விழுந்த கட்டடம்; 13 பேர் பலி

1 mins read
36b9bbc6-147d-4664-a365-3b67ff518a07
-

இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பலமாடிக் கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானதில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டடச் சிதைவுகளிலிருந்து இதுவரை 17 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தனர். ராணுவ அதிகாரிகள் எழுவர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. கட்டடம் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் இதன் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்படும் என்றும் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பருவ மழையால் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றன.