இந்தியாவின் ஆகப் பெரிய வங்கியான 'எஸ்பிஐ', அந்நாட்டின் 'ரிசர்வ்' வங்கி ஒழுங்குமுறைகளை மீறியதற்காக ஏழு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகளைத் தொடங்குதல், நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகளை 'எஸ்பிஐ' மீறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வங்கியின் மீதான சோதனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின்படி, எஸ்பிஐ வங்கிக்கு அறிவிப்புக் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.
"எஸ்பிஐ வங்கியின் பதிலையும் வாய்மொழி சமர்ப்பிப்புகளையும் கருத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முகாந்தரம் இருப்பதாக முடிவு செய்துள்ளது. அந்த வங்கிக்கு விதிக்கப்படும் அபராதமும் அவசியமானது" என்றது ரிசர்வ் வங்கி.

