மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்தது; சிக்கிக்கொண்டோரை மீட்பதில் சிரமம்

மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்தது; சிக்கிக்கொண்டோரை மீட்பதில் சிரமம்

2 mins read
59adda3f-0ae6-461a-b001-b0f31d3753a3
இடிபாடுகளில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றி, அதைத் தூக்கிச் செல்லும் மீட்புப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

மும்பையின் டோங்கிரி பகுதியில் நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிர் இழந்தனர்.

நேற்று முற்பகலில் நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் சிக்கி­யிருக்­கலாம் என அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணி மிகவும் சிரமமாக உள்ளது. ஒரு குழந்தை உட்பட எட்டுப் பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவ­மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

எந்த வாகனமும் செல்ல முடியாத மிகவும் நெரிசலான பகுதியாக இருப்பதால் மனித சக்தியைக்கொண்டே மீட்புப் பணி நடைபெறுகிறது.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 20 பேர் ஈடு­படுத்தப்பட்டனர்.

இயந்திரங்களையோ வாகனங்­களையோ பயன்படுத்தி இடிபாடு­களை அகற்ற முடியாத நிலை இருப்பதால் மீட்புப் பணி­யாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து இடிபாடுகளை அகற்றி சிக்கி இருப்போரைத் தேடுகின்றனர்.

இதனால் மீட்புப் பணிகள் மந்த­­ நிலையிலேயே நடைபெறுவதாக குற்றச்­ சாட்டுகள் எழுந்துள்ளன.

டோங்கிரி காவல்துறையினர் விபத்து நிகழ்ந்த பகுதியைச் சுற்றித் தடுப்பு வேலிகளை அமைத்துக் கூட்டம் கூடு­வதைக் கட்டுப்படுத்தி வரு­கின்றனர்.

சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "விபத்திற்­குள்ளான கட்டடம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்ட­டத்தை இடிக்க 2012ஆம் ஆண்டே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அது பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது," என்றார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்து கூறிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கட்டடத்தை இடிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அது தொடர்ந்து பயன்படுத்தப்­பட்டு வந்ததற்கான காரணம் என்ன என அப்பகுதி மக்களைக் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமக்குக் கிடைத்த தகவலின்படி ஒன்பது குடும்­பங்களைச் சேர்ந்தவர்கள் இடிபாடு­களில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்­ பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.