புதுடெல்லி: புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்று இந்தியாவில் மிகப்பெரும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட இருந்தனர். மேலும் 'அன்சா ருல்லா' என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட திட்டமிட்டிருந்தனர். இந்தப் புதிய அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் ஆட்களைத் திரட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் பின்னணியில் இருக்கும் அனைவரையும் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

