இமாச்சலப்பிரதேசம், குஜராத்துக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் அதிபர்

இமாச்சலப்பிரதேசம், குஜராத்துக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் அதிபர்

1 mins read

புதுடெல்லி: இரண்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து அதிபர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஓம் பிரகாஷ் கோலி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்குப் பதிலாக இமாச்சலப்பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சாரியா தேவ்வி ராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளையில், இமாச்சலப்பிரதேசத்துக்கான புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை அதிபர் பிறப்பித்துள்ளார்.