சபாநாயகருக்கே முழு அதிகாரம்; இந்திய உச்ச நீதிமன்றம்

கர்நாடகாவின் ஆளுங்கூட்டணிக்கு எதிராகத் திரும்பிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் மாநில சபாநாயகருக்கு மட்டும் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பதவி விலகலை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும் உரிமை நீதிமன்றங்களுக்கு இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

“சபாநாயகரின் முடிவை எந்த நீதிமன்ற உத்தரவும் பாதிக்கக்கூடாது. அந்தப் பதவி விலகல்களை ஏற்பது குறித்த முடிவை சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் சட்டமன்ற நடப்புகளில் பங்கேற்க இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் வற்புறுத்தப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் மாநில அரசாங்கம், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களைப் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. கடந்த இரண்டு வாரங்களில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியைச் சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்களும் இரண்டு சுயேச்சை உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர். இந்தப் பதவி விலகல்கள் ஏற்கப்பட்டால் ஆளுங்கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்துவிடும். கூட்டணியின் 118 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை 100ஆகக் குறையும். மாநில சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் இரண்டு சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் தகுதிநீக்கத்தை எதிர்நோக்குவதாகக் கூறிய சபாநாயகர் கே. ஆர். ரமேஷ், அவர்களது பதவி விலகல் கடிதத்தை முழுமையாக ஆராய்வதற்கு நேரம் தேவைப்படுவதாகக் கூறினார். மேலும் , பதவி விலகல்கள் வற்புறுத்தலின் பேரில் நிகழ்ந்ததா என்பதை உறுதி செய்வதற்கும் நேரம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் மீண்டும் தேர்தலில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவர். அத்துடன் அவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க முடியாது. ஆனால் அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் ஏற்கப்பட்டால் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் வெகு சுலபத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட முடியும். தேர்தலில் மீண்டும் பங்கேற்க அவர்களுக்கு ஆறு மாதங்கள் இருக்கும்.

ஜூலை 6ஆம் தேதியன்று பதவி விலகிய அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் தங்கியுள்ளனர். சபாநாயகர் ஆளுங்கூட்டணிக்குச் சாதகமாக நடந்துகொண்டு தங்களது பதவி விலகலில் இழுபறியை ஏற்படுத்த முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கர்நாடகாவின் முதலமைச்சர் குமாரசாமி சபாநாயகரை ஆதரித்துப் பேசியுள்ளார். தமது ஆட்சிக்குப் பதற்றத்தை ஏற்படுத்துவதே அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களின் நோக்கம் என்றும் அவர்களது பதவி விலகல் கவனமாக மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மும்பைக்குச் சென்றிருந்த ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தான் அமைச்சர் ஆகவேண்டும் என்றே எண்ணுகின்றனர்,” என்றார் திரு குமாரசாமி

ஆளுங்கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்திருப்பதால் அது ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!