திருமண நாளன்றே ‘முத்தலாக்’ விவாகரத்து

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவர் ஒரே நாளில் அவரை விவாகரத்து செய்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜஹாங்கிரபாத்தைச் சேர்ந்த ஷாஹே அலாம், ஜூலை 13ஆம் தேதி ருக்சனா பானுவைத் திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் குடும்பத்தார் தனக்கு மோட்டார் சைக்கிளை வரதட்சணையாகக் கொடுக்கவில்லை என்பதற்காக அந்த ஆடவர் உடனே முத்தலாக் முறையின்படி திருமணத்தை அதே நாளில் முறித்துக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலிசாரிடம் புகார் செய்ததை அடுத்து போலிசார் அலாமைக் கைது செய்தனர்.