புதுடெல்லி: பெண்கள் தங்களுக்கு விருப்பமான புடவையுடன் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிடும் 'SareeTwitter' என்ற சமூக வலைத்தளம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும் இந்திய அளவில் பிரபலமாகி வரும் ஹேஸ்டேக் புடவை பதிவில் இணைந்துள்ளார்.
தன் திருமணத்தன்று காலையில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றபோது தான் உடுத்தி இருந்த புடவையுடன் எடுத்த ஒரு படத்தை பிரியங்கா அதில் பதிவிட்டுள்ளார்.

