திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள்

திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள்

1 mins read

புதுடெல்லி: சென்னையை மையமாகக் கொண்டு திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள் அமைக்கும் திட்டப் பணிகளை வேகப்படுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பொதுத்துறை ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனம் மற்றும் மருந்து ஆலைகளுக்குத் தரப்படுவது போல் தனியார் நிறுவனங்களுக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்க ஒப்புதல் அளித்தார்.