புதுடெல்லி: வடமாநிலங்களில் கனமழை நீடிக்கும் நிலையில், ஏழு மாநிலங்களில் மழை தொடர்பான விபத்துகளில் ஜூன் 10 முதல் 95 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானா, அசாம், பஞ்சாப், பீகார், உத்திரப் பிரதேச மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. அசாம் வெள்ளத்தில் மிதப்பதாகவும் அங்கு 52 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 20 பேர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளத்தில் அசாம் மிதக்கிறது; வட இந்தியாவில் 95 பேர் பலி
1 mins read

