சிங்கப்பூருக்குச் செல்லும் புதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை

இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவில் ஐந்து புதிய அனைத்துலக பயணச் சேவைகளை அறிமுகம்  செய்துள்ளது.  மும்பைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்று பயணங்களும் மும்பைக்கும் தாய்லாந்தின் பேங்காக் நகருக்கும் இடையிலான இரண்டு பயணங்களும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி துவங்கும்.

நாள்தோறும் கிட்டத்தட்ட 1,400 விமானப் பயணங்களை வழங்கும் இண்டிகோ, 55 உள்நாட்டு இடங்களுக்கும் 17 அனைத்துலக இடங்களுக்கும் பயணச் சேவைகளை நடத்துகிறது.