இந்தியா: குல்பூஷண் ஜாதவை விரைவில் விடுவிக்க புதுடெல்லி இடைவிடாமல் முயலும்

இந்தியா: குல்பூஷண் ஜாதவை விரைவில் விடுவிக்க புதுடெல்லி இடைவிடாமல் முயலும்

1 mins read
ad077aaf-cf77-422a-a3fa-b5ffe84178c2
இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை சந்திக்க 2017 டிசம்பரில் அவரின் தாயாருக்கும் மனைவிக்கும் அனுமதி கிடைத்தது. இருவரும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் ஜாதவை (உள்படம்) சந்தித்தனர். படம்: ஏஎஃப்பி, இந்திய ஊடகம் -

புதுடெல்லி: ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது.

ஈரானிலிருந்த குல்பூஷண் ஜாதவை கடத்திச் சென்று பாகிஸ்தான் கைது செய்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது.

குல்பூஷண் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டுமென அந்த நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதனை வரவேற்ற இந்தியா வின் வெளியுறவு அமைச்சு, பாகிஸ் தான் பிடியில் இருந்து ஜாதவை விரைவில் விடுவிக்க மும்முரமாக இந்தியா முயலும் என்று அறிவித்தது. உலக நீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவுக்குச் சாதகமாக இருப்பதாக அமைச்சு கூறியது.