தண்ணீர் தகராறு: 25 வயது கர்ப்பிணி சுட்டுக்கொலை

தண்ணீர் தகராறு: 25 வயது கர்ப்பிணி சுட்டுக்கொலை

1 mins read

ஈட்டா: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாமுவார் என்ற கிராமத்தில் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பில் 25 வயது நிறை மாத கர்ப்பிணி சுட்டுக்கொல்லப்பட்டார்.

மம்தா என்ற அந்த மாது மாண்டதன் தொடர்பில் சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக கிராமத் தலைவர் கூறினார்.